உலகில் கோப்பி (Coffee) குடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் அடிப்படையில் உலகில் அதிகளவான கோபிகளை அருந்துபவர்களின் வரிசையில் முதலிடத்தில் லக்சம்பர்கை சேர்ந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் உறக்கத்திலிருந்து விழித்தபின்னரும், ஒன்றுகூடலின்போதும், உடல் சோர்வாக இருக்கும் போதும் மற்றும் பல சந்தர்ப்பங்களிலும் இதை அனைவரும் அருந்துகின்றனர். கால மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் கோப்பி அருந்துவதில் பல மாற்றங்களை கண்டுள்ளனர். இன்று கோப்பிகளையே பல நிறங்களிலும், மனங்களிலும், சுவைகளிலும், பல வடிவங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. இன்று மக்கள் இடம், தமது மனநிலை மற்றும் காலநிலைகளுக்கு ஏற்றார் போல் பலவாறான கோப்பிகளை அருந்துவதை நம்மால் காண முடியும். அவ்வாறான, பல புதிய கோப்பி வகைகள் மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகின்றன. உதாரணமாக,
- கெப்பசினோ
- எஸ்பிரெசோ
- லட்டு
- அமெரிக்கனோ
- காஃபி மோச்சா
- பிளட் வைட்
- காஃபி மச்சியாடோ
- கோல்ட் ப்ரூ
- ஐஸ் கோப்பி
- கோர்டாடோ
- ஐரிஷ் காஃபி
- அஃபோகாடோ
- டோப்பியோ
- ரிஸ்ட்ரெட்டோ
- ட்ரிப் கோப்பி
- காஃபி அரேபிகா
- லோங் ப்ளக்
- துருக்கிய கோப்பி
- ரெட் ஐ
- லுங்கோ
- ஃப்ராப்பே
- இன்ஸ்டன்ட் கோப்பி
- ரோபஸ்டா கோப்பி
அந்த வகையில் விலை உயர்ந்த கோப்பிகளில் ஒன்றான கோப்பி லுவாக் பற்றித்தான் நாம் இன்று அறிந்து கொள்ள போகிறோம். இக்கோப்பியின் விலை நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தினாலும், அதை தயாரிக்கும் முறை நம்மை மேலும் ஆச்சரியப்படுத்தக“கூடிய ஒன்றாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இன்று உலக சந்தையில் ஒரு கப் லுவாக் கோப்பி $26 க்கும், 1 கிலோ கோப்பி $500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோப்பியின் சிறப்பு என்னவென்றால், இது லுவாக் என்று அழைக்கப்படும் புனுகுப் பூனை மலத்தில் இருந்து பெறப்படும் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இன்று இந்தோனேசியா கோப்பி லுவாக்கிற்கு பிரபலமாக திகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த கோப்பி இந்தோனேசியாவில் மட்டுமல்லாமல் பல தென்கிழக்காசிய நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
கோபி லுவாக் எப்படி தயாரிக்கப்படுகிறது?
இவை சிவெட்/லுவாக் எனப்படும் பூனை மலத்திலிருந்து பெறப்படும் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதன் மலம் பனை சிவெட் எனப்படும். கோபி லுவாக் தயாரிப்பவர்கள் லுவாக் பூனைகளுக்கு கோப்பி பெர்ரிகளை உணவாக வழங்குவார்கள். ஆனால், இவ்வகைப் பூனைகள் அனைத்து கோப்பி பீன்ஸ்களையும் சாப்பிடுவதில்லை. அவற்றில் எவை சிறந்த தரமான கோப்பிப் பழங்கள் எது என்பதை அறிநதுகொள்ளும் திறன்கொண்ட அவை நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கம் கொண்டவை.
கோப்பி பழங்களை உண்ட பூனைகள் அவை ஜீரணித்த பிறகு கோப்பி கொட்டைகளை கழிவுகளாக வெளியேற்றும். அவ்வாறு, வெளியேற்றப்பட்ட கழிவுகளில் கோப்பி பழங்களின் கொட்டைகள் மட்டுமே இருக்கும். பின்னர், லுவாக் பூனைகளின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் கோப்பி கொட்டைகள் உடைக்கப்பட்டு வெளிப்புற தோலை நீக்கப்படுகிறது. மீண்டும் அவை நன்கு கழுவி உலர்த்தப்பட்டு வருத்து எடுத்து,, கோப்பி தூளாக அரைக்கப்படுகிறது.
கோப்பியின் மருத்துவ குணங்கள்
- லுவாக் பூனைகளின் வயிற்றில் உள்ள இயற்கை நொதிகள் கோப்பி விதைகளின் சுவையை மேலும் அதிகரிக்கச்செய்கிறது.
- கோபி லுவாக் மற்ற கோப்பியை விட குறைவான கசப்பு மற்றும் நறுமணம் கொண்டது.
- இது இயற்கையாகவே லேசான இனிப்பு மற்றும் சாக்லேட் நறுமணத்தைக் கொண்டுள்ளது.
- இதில் ஆல்கலாய்டுகள், ஆர்கானிக் அமிலங்கள், பொட்டாசியம், மினரல் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன.
- பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கிறது என நம்பப்படுகிறது.
- நரம்பு சம்பந்தமான நோய் வராது எனவும் நம்பப்படுகிறது.
- சர்க்கரை சேர்க்காமல் தினமும் 2 முதல் 4 கப் வரை குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வராது.
- பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கிறது.
- உடல் வலிமையை அதிகரிக்கிறது.
பல மருத்துவ குணங்கள் இவற்றில் உள்ளன எனக் கூறப்பட்டாலும், இவை இன்னும் நிரூப்பிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. சில சமயம் இவை எதிர்காலங்களில் நிரூபிக்கப்படலாம். எதுவாக இருந்தாலும் கோப்பி அருந்துவது ஆரோக்கியமானது என்றாலும் எதுவும் அளவுக்கு மீறினால் நோயையே ஏற்படுத்தும். எனவே அளவுடன் அருந்துவோம்.
"கோப்பி குடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்."